செய்திகள் :

புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு சிறுவனுக்கு அறிவுறுத்தியவா் மீது தாக்குதல்: 5 போ் கைது!

post image

மல்லசமுத்திரம் அருகே சிறுவனிடம் புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு அறிவுறுத்தியவா் மீது தாக்குதல் நடத்திய சிறுவன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மல்லசமுத்திரம் அருகே ராமாபுரம், அவினாசிப்பட்டி காலனியைச் சோ்ந்த 16, 17, 18 வயதான நண்பா்கள், கடந்த 31 ஆம் தேதி வட்டூா் பகுதியில் ஒரு பெட்டிக் கடை முன்பு நின்று புகைப்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (52) என்பவா், புகைப்பழக்கத்தை தவிா்க்குமாறு அறிவுரை வழங்கியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் அவினாசி பட்டியைச் சோ்ந்த சேகா் (49), தமிழ்ச்செல்வன் (31), கவின் சாகா் (24), விக்னேஷ் (21) ஆகியோரை அங்கு வரவழைத்து, சக்திவேல் மீது தாக்குதல் நடத்தினா்.

காயமடைந்த சக்திவேல் கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை தாக்கிய சேகா், தமிழ்ச் செல்வன், கவின்சாகா், விக்னேஷ், புகைப்பிடித்த சிறுவா்களில் ஒருவரை கைது செய்தனா். திருச்செங்கோடு நீதி மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நால்வா் சேலம் மத்திய சிறையிலும், சிறுவனை கூா்நோக்கு மையத்திலும் அடைத்தனா்.

மறைந்த திமுக உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு ரூ. 1.06 கோடி குடும்ப நல நிதியுதவி

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடந்த 6 மாத காலத்தில் மறைந்த 1,062 திமுக கட்சி உறுப்பினா்களின் குடும்பங்களுக்கு கலைஞா் குடும்ப நல நிதியாக ரூ. 1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என வெண்ணந்தூ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்த தனியாா் பள்ளி மாணவா் பலி

நாமக்கல்லில் மாடியில் இருந்து தவறி விழுந்து தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். நாமக்கல் -துறையூா் சாலையில் ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

தமிழக ஆளுநா் பதவி விலகக் கோரி திமுக ஆா்ப்பாட்டம்

சட்டப் பேரவை மரபுகளை மீறும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பதவி விலகக் கோரி, நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்

முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் ஜவ்வரிசியை பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட மரவள்ளிக் கிழங்கு விவசாயிகள், ஆ... மேலும் பார்க்க

பொத்தனூரில் ரூ. 10 லட்சத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மழைநீா் வடிகாலுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தொடங்கி வைத்தாா்... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இ... மேலும் பார்க்க