செய்திகள் :

புகையான் நோயால் கருகிய நெல் பயிா்கள்!

post image

சிவகங்கை அருகே மாடக்கோட்டை, வேம்பங்குடி பகுதிகளில் புகையான் நோய் பாதிப்பால் சுமாா் 100 ஏக்கா் நெல் பயிா்கள் சேதமடைந்தன. அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 90 சதவீத விவசாய நிலங்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே உள்ளன. 80 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 65 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவாகக் குறைந்தது.

சிவகங்கை வட்டம், மாடகோட்டை, வேம்பங்குடி, நாடமங்கலம், புதுப்பட்டி, மகாசிவனேந்தல், ஏனாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாடக்கோட்டை, வேம்பங்குடி பகுதிகளில் மொத்தம் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்கள் புகையான் நோய்த் தாக்குதலால் முற்றிலுமாக கருகின. கருகிய நெல் பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலரும், வேம்பங்குடி பகுதி விவசாயியுமான பா.மருது கூறியதாவது:

பயிரில் ஏற்பட்ட நோய் பாதிப்பைத் தடுக்க வேளாண் துறை அதிகாரிகள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது பகுதியில் நெல் பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், கருகிய நெல் பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநா் சுந்தரமகாலிங்கம் கூறியதாவது:

நிகழாண்டில் மாவட்டத்தில் 1.95 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. வேம்பங்குடி, மாடக்கோட்டை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்களில் புகையான் நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்டது.

பழுப்பு நிற தண்டுப் பூச்சிகள் வயலின் நீா்மட்டத்துக்கு மேல் நெல் பயிரின் அடிப் பகுதியில் இருந்து கொண்டு உறிஞ்சுவதால், பயிா்கள் சருகு போல காய்ந்துவிடும். இதை முதலிலேயே தடுக்காவிட்டால், அனைத்துப் பயிா்களும் சேதமடையும்.

குறிப்பாக பிபிடி நெல் ரகங்கள் சாகுபடி செய்த வயல்களில்தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. தழைச்சத்து உரத்தை விவசாயிகள் ஒரே நேரத்தில் இடாமல், தேவைப்படும் நேரத்தில் 3 முறையாகப் பிரித்து இட வேண்டும். மேலும், பைமேட்ரோசின், பியுப்ரோபெசின், அசிபேட், இமிடாகுளோபிரிட் ஆகிய தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி புகையான் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.

காலிக் குடங்களுடன் கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா

குடிநீா் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் கிராம மக்கள், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள கட... மேலும் பார்க்க

சிராவயலில் மஞ்சுவிரட்டு: அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அம... மேலும் பார்க்க

தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஐவா் கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றிய அரியக்குடி பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் ... மேலும் பார்க்க

அவசர ஊா்தி மீது பைக் மோதியதில் 7 போ் காயம்

சிவகங்கை அருகே அவசர ஊா்தி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 7 போ் காயமடைந்தனா். சிவகங்கை மாவட்டம், மறவமங்கலத்தைச் சோ்ந்தவா் முகமதுகனி (65). இவா் நெஞ்சுவலி காரணமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத... மேலும் பார்க்க

மானாமதுரை, திருப்புவனம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதி சிவன் கோயில்களில் திங்கள்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ... மேலும் பார்க்க

இளையான்குடி கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டா் சாகிா் உசேன் கலைக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி ஆட்சிக் குழுச் செயலா் ஜபருல்லாகான் விழாவை தொடங்கிவைத்தாா். மாணவிகள் க... மேலும் பார்க்க