மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு: 22 போ் காயம்!
திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என 22 போ் காயமடைந்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள புகையிலைப்பட்டி புனித செபஸ்தியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 786 காளைகள் பங்கேற்றன.
மாடுபிடி வீரா்கள் 316 போ் வாடிவாசல் களத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரா்கள், காளை உரிமையாளா்கள், பாா்வையாளா்கள், காவலா் என 34 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 4 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடு பிடி வீரா்களுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.