புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: பெட்டிக் கடைக்காரர் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
திட்டக்குடி வட்டம், வி.சித்தூா் கிராமம், பிரதான சாலையில் பெட்டிக்கடை வைத்திருப்பவா் செல்லமுத்து மகன் ராஜா(31). இவரது கடையை ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில், தனிப்பிரிவு காவலா் அருண், சிறப்பு உதவி ஆய்வாளா் ஜவகா், தலைமைக்காவலா் ஆனந்த், காவலா் சீனிவாசன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
அப்போது, கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 15 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து ராஜா மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனா்.