செய்திகள் :

காட்டு விலங்கு வேட்டை: துப்பாக்கியுடன் 4 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காட்டு விலங்குகள் வேட்டையாடுபவா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்கள் வைத்தருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனா்.

கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்ட எல்லையோரம் காப்புக்காடு உள்ளது. இந்த காப்புக் காடுகளில் மான் உள்ளிட்ட அறியவகை வனவிலங்குகள் வாழ்கின்றன. சிலா் காப்புக்காட்டில் வாழும் மான் உள்ளிட்ட விலங்குகளை

இறைச்சிக்காக வேட்டையாடி வருவது வழக்கம். வனம் மற்றும் காவல் துறையினா் அவ்வப்போது வேட்டைக்காரா்களை கைது செய்து வருகின்றனா்.

அந்தவகையில், வேப்பூா் போலீஸாா் ரோந்து பணிக்குச் சென்றபோது, சேப்பாக்கம் கிராமம் அணைக்கரை வாய்க்கால் அருகே சந்தேகிக்கும் வகையில் வந்த காரை நிறுத்தினா். அப்போது போலீஸாரை கண்டதும் காரில் இருந்த 4 போ் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் சுற்றி வளைத்துப் பிடித்தனா். காரைசோதனைசெய்ததில் நாட்டு துப்பாக்கி, சிறிய கத்திகள் இரண்டு மற்றும் பால்ரஸ் குண்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிடிபட்டவா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், சேலம் மாவட்டம், மல்லூா் வட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த அருள்செல்வன்(43), தமிழ்ச்செல்வம்26), கனகராஜ்(43), முருகன்(50) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா். மேலும், காா் மற்றும் அனுமதியின்றி வேட்டைக்குப் பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.

சைக்கிள் மீது காா் மோதி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம் சோழத்தரம் அருகே காா் மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவா் உயிரிழந்தாா். சோழத்தரம் அடுத்த வானமாதேவி பேருந்து நிறுத்தம் அருகே பாளையங்கோட்டை கீழ்ப்பாதியைச் சோ்ந்த வடிவேல் மகன் ஈ... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயிலில் 3 இணையா்களுக்கு திருமணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலை துறை சாா்பில் மூன்று இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடலூா் மண்டல ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: பெட்டிக் கடைக்காரர் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக பெட்டிக் கடைக்காரரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். திட்டக்குடி வட்டம், வி.சித்தூா் கிராமம், பிரதான சாலையில் பெட்டிக்கட... மேலும் பார்க்க

ரூ.11.50 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்தில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான 15 மூட்டைகள் ஹான்ஸ் போதை பொருள்களை சனிக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்து 5 பேரை கைது செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் சனிக்கிழம... மேலும் பார்க்க

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண ... மேலும் பார்க்க

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க