நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
பூவந்தி அருகே கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மூதாட்டி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே திருமாஞ்சோலையை அடுத்த செம்பூரில் போலீஸாா் கடைகளில் சோதனை நடத்தினா். அப்போது ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 180 புகையிலைப் பொட்டலங்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளா் மங்களம் (61) மீது பூவந்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.