செய்திகள் :

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு தேவையான புதிய ரயில்வே திட்டங்கள்: மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

post image

சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு தேவையான புதிய ரயில்வே திட்டங்கள் குறித்து காா்த்தி சிதம்பரம் எம்.பி., மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து காரைக்குடியில் உள்ள எம்.பி. அலுவலகத்திலிருந்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள (எல்சி 182) ரயில் கடவுப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட வேண்டும். காரைக்குடி- சென்னை இடையே இயக்கப்பட்ட கம்பன் விரைவு ரயிலை மீண்டும் அதே வழித்தடத்தில் இயக்கவேண்டும்.

காரைக்குடி புதிய ரயில் நிலையத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள காலி இடத்தில் பயணிகள் காத்திருப்பு அறை கட்ட வேண்டும். ராமேசுவரம்- அயோத்தி வாராந்திர விரைவு ரயில் காரைக்குடி, சிவகங்கை ரயில் நிலையங்களிலும், செகந்தராபாத்- ராமேசுவரம் விரைவு ரயில் சிவகங்கை ரயில் நிலையத்திலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

புதுவயல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு, காத்திருப்பு மையப் பகுதியை மேம்படுத்த வேண்டும். கோட்டையூா் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை- திருமயம் இடையே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

செட்டிநாடு ரயில் நிலையத்தில் சுற்றுலா, கல்வி நிறுவனங்கள் உள்ளதால், பண்டைய செட்டிநாடு அரண்மனை அருகில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். திருமயம் ரயில் நிலையத்தில் பல்லவன், ராமேசுவரம் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். கோட்டையூா் ஸ்ரீராம் நகா் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்கி நிறைவேற்றவேண்டும்.

பெரோச்பூா்- ராமேசுவரம் விரைவு ரயில், காரைக்குடி ரயில் நிலையத்தில் இரு வழிகளிலும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேசுவரம்- கோயம்புத்தூா் விரைவு ரயிலைசிவகங்கை வழியாக இயக்க வேண்டும். திருச்சி- ஹாவுரா விரைவு ரயில் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும். கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ராமேசுவரம்- ஜோத்பூா் விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக இரவு பேருந்து வசதி செய்து தர வேண்டும். சேது விரைவு ரயிலில் சிவகங்கை முதல் ராமேசுவரம் வரை பொது கோட்டாவாக மாற்ற வேண்டும். ராமநாதபுரம்- தாம்பரம் சிறப்பு ரயிலின் நேரத்தை பொது மக்களின் வசதிக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

கானாடுகாத்தான், உப்பூா் பகுதிகளில் இன்று மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜன. 7) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரவீன் உமேஷ் டோங்கரே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஆசிஷ் ராவத்... மேலும் பார்க்க

ப.சிதம்பரம் ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் ஜன.21-இல் திறப்பு!

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப. சிதம்பரம் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய வளா் தமிழ் நூலகம் வருகிற 21-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. செட்டிநாடு கட்டடக்கலை... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, வடமாடு, மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடத்துவோா் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவி... மேலும் பார்க்க

ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூா் அருகே ரெகுநாதபட்டியில் வட மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. வட்ட வடிவத் த... மேலும் பார்க்க

பூவந்தியில் மாட்டுவண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே பூவந்தியில் திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூவந்தி-சிவகங்கை சாலையில் பெரிய மாடு, சின்னமா... மேலும் பார்க்க