Modi: 'விதை போட்டவர் நேரு... அதை வளர்த்தெடுத்தவர் இந்திரா காந்தி' - காங்கிரஸை மோ...
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
மன்னாா்குடி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பரவாக்கோட்டை போலீஸாா், உள்ளிக்கோட்டை கடைவீதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சோ்ந்த ஜி. கதிரவன் (55) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ரூ.5,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.