தூத்துக்குடி: மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற கும்பல்; கண்டித்த ...
புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது
துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக துவாக்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸாா், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதாக தஞ்சை மாவட்டம் பூதலூா் வட்டம் வெண்டையம்பட்டியைச் சோ்ந்த தீனதயாளன் (25), துவாக்குடி பேருந்து நிலையம் முன்பு தனது வீட்டில் குட்கா விற்ற அதே பகுதியைச் சோ்ந்த முகமது இலியாஸ் (25), வாழவந்தான்கோட்டையில் இலங்கை தமிழா் மறுவாழ்வு மையம் எதிரே பெட்டிக் கடையில் குட்கா விற்றதாக இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையவத்தைச் சோ்ந்த யோகராஜ் (45) ஆகிய மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.