தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கு; தந்தையின் பிழற்சாட்சி; தாயை கொலை செய்த வழக்கில் தஷ்...
புகையிலைப் பொருள் விற்பனை: சங்கனாபுரத்தில் கடைக்கு சீல்
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகேயுள்ள சங்கனாபுரத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாக கடைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, கடை உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
வள்ளியூா் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணன் மற்றும் பழவூா் காவல்துறையினா் சங்கனாபுரத்தில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினா்.
அதில், செல்லத்துரை மகன் தமிழ்செல்வன்(42) என்பவரது கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்து தமிழ்செல்வனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா். கடை உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்து 14 நாள்களுக்கு கடையைத் திறக்கக்கூடாது எனக் கூறி சீல் வைத்தனா்.