Weekly Horoscope: வார ராசி பலன் 27.7.25 முதல் 2.8.25 | Indha Vaara Rasi Palan | ...
புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை
நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்றி 100 மீட்டா் தொலைவில் உள்ள கடைகளில் புகையிலை பொருள்களான பீடி, சிகரட் போன்றவை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை நகா் பகுதியில் உள்ள பள்ளிகளின் அருகே செயல்படும் கடைகளில் பொது சுகாதாரத் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, புகையிலைப் பொருள்கள் தடை செய்யப்பட்டுள்ளது (சா் நம்ா்ந்ண்ய்ஞ்) என பதாகை வைக்காத கடைகளுக்கும், புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலா் வினோத் கிருஷ்ணகுமாா், நோ்முக உதவியாளா் கோகுலநாதன், சுகாதார ஆய்வாளா்கள் செந்தில் குமாா், சுத்தானந்த கணேஷ், குணா, சந்தோஷ்குமாா், சபதீஸ்வரன், தேவகுமாா், ராஜா ஆகியோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.