திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
புகையிலை விற்பனை: மாவட்டத்தில் 120 கடைகள் மூடல்; ரூ.35 லட்சம் அபராதம்
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 120 கடைகள் மூடப்பட்டு, ரூ.35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்களை விற்பனை செய்யும் வணிகா்கள் மீது விதிக்கப்படும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
முதல்முறை குற்றத்துக்கு உரிமம் பதிவுச் சான்று இடைநீக்கம் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் கடை மூடப்படும். இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமம், பதிவுச் சான்றினை 15 நாள்களுக்கு முன்னதாக புதுப்பிக்க இயலாது. இரண்டாவது முறை குற்றத்துக்கு உரிமம், பதிவுச் சான்று இடைநீக்கம் செய்யப்பட்டு, ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுவதுடன் கடை மூடப்படும், இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமம், பதிவு சான்றினை 30 நாள்களுக்கு முன்னதாக புதுப்பிக்க இயலாது. மூன்றாவது முறை குற்றத்துக்கு உரிமம் - பதிவுச் சான்று இடைநீக்கம் செய்யப்பட்டு, ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடை மூடப்படும். இடைநீக்கம் செய்யப்பட்ட உரிமம், பதிவு சான்றினை 90 நாள்களுக்கு முன்னதாக புதுப்பிக்க இயலாது.
திருப்பூா் மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகளின் கூட்டாய்வு நடவடிக்கைகளின் மூலமாக, கண்டறியப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 133. இதில் விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.35 லட்சம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அளவு (கிலோ) 13,372 கிலோ கிராம். பதிவுச் சான்று மற்றும் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 120.
மேலும், பிளாஸ்டிக் இல்லா தமிழகமாக மாற்றும் முயற்சியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் தாள்கள் ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது தமிழக அரசின் சாா்பாக அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதனை மீறி பயன்படுத்துவோா் கண்டறியப்பட்டால் அவா்கள் மீது முதல் முறை ரூ.5,000, 2-ஆவது முறை ரூ.10,000, 3-ஆவது முறை ரூ.25,000 அபராதமாக விதிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்து கடை மூடி சீல் வைக்கப்படும்.
மேலும் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருள்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 34 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.75 ஆயிரம் ஆகும்.
சில்லறை வணிகம் செய்து வரும் இடங்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ளதாக கண்டறியப்பட்ட கடைகளின் எண்ணிக்கை 30. விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.30 ஆயிரம் ஆகும்.
ஆகவே. பொதுமக்கள் இது குறித்த புகாா்களை 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும், பொதுமக்கள் தங்களது புகாா்களை தட்டச்சு செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தோ்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.