இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!
'புதின் சீக்கிரம் இறந்துவிடுவார்!' - ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து ஜெலன்ஸ்கி பேச்சு
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தின் போதிலிருந்து இந்தப் போரை நிறுத்துவதில் முனைப்புடன் இருக்கிறார்.
இது குறித்து அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப். ஆனால், அது கைக்கூடவில்லை.
ஆனால், அதன் பிறகு, சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா மற்றும் உக்ரைன் அதிபர்களின் பேச்சுவார்த்தையில் 'உடனடி 30 நாள்கள் போர் நிறுத்தத்திற்கு' ஒப்புக்கொண்டது உக்ரைன்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டனர்.
இதனிடையில், 'போர் நிறுத்தத்திற்கு தயார்' என்று கூறி, அது சம்பந்தமான சில கேள்விகளையும் கேட்டிருந்தார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், அந்தக் கேள்விகளுக்கான பதில் இன்னமும் அமெரிக்காவிடம் இருந்து வரவில்லை.
'அப்போது போர் நின்றுவிடும்'! - ஜெலன்ஸ்கி
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள ஜெலன்ஸ்கி, "அவருடைய வயதை வைத்து பார்க்கும்போது, புதின் சீக்கிரம் இறந்துவிடுவார். அது தான் உண்மை. அப்போது இந்தப் போர் நின்றுவிடும். அதற்கு முன்பு கூட போர் நிறுத்தத்தை எட்டலாம்" என்று பேசியுள்ளார்.
புதினின் உடல்நிலை மோசமடைந்துள்ளது போன்ற தகவல்கள் வெளியாகி வரும் வேளையில், ஜெலன்ஸ்கி இப்படி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதற்கு புதின் மற்றும் போர் நிறுத்தத்திற்கு கடுமையாக முயலும் அமெரிக்காவின் பதிலடி எப்படி இருக்கும் என்பதை அடுத்தடுத்து நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.