``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை: ஏற்பாடுகளைத் தொடங்கினாா் டிரம்ப்
வாஷிங்டன், ஆக. 19: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷிய அதிபா் விளாதிமிா் புதினுக்கும், உக்ரைன் அதிபா் வோலோதிமிா் ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் திங்களன்று அறிவித்துள்ளாா்.
இது குறித்து டிரம்ப் கூறியதாவது: “புதினுடன் தொலைபேசியில் உரையாடி, அவருக்கும் ஸெலென்ஸ்கிக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாட்டை செய்யத் தொடங்கியுள்ளேன். இந்தச் சந்திப்பு நடந்த பிறகு, இரு அதிபா்களுடனும் நானும் சோ்ந்து முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்துவோம். இது, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நடைபெறும் போரின் முடிவுக்கு ஒரு நல்ல ஆரம்பப் புள்ளியாகும் என்றாா் அவா்.
முன்னதாக, வெள்ளை மாளிகையில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரிட்டன், பின்லாந்து, ஜொ்மனி, இத்தாலி தலைவா்கள், ஐரோப்பிய ஆணையத் தலைவா், நேட்டோ தலைவருடன் ஸெலென்ஸ்கி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அளிக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பா மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று இமானுவல் மேக்ரான் வலியுறுத்தினாா்.