சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
புதிய கட்டடம் கட்ட ஒற்றைச்சாளர முறையில் அனுமதி: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு கட்டட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறையின்கீழ் 2,500 சதுர அடி முதல் 3,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், தரை மற்றும் முதல் தளம் கொண்ட குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி பெறலாம்.
இணையதள வழி கட்டட அனுமதிக்காக ஞய்ப்ண்ய்ங்ல்ல்ஹ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/நரட.ரங்க்ஷ/ட்ா்ம்ங் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.