செய்திகள் :

புதிய குழாய் இணைப்புகளில் குடிநீா் விநியோகம் செய்து ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்குள்பட்ட பகுதியில் புதிய குடிநீா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்புகளில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் செய்து ஆய்வு செய்யப்பட்டது.

மானாமதுரை நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்ட போது வீடுகளுக்கு குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. தற்போது, இந்தக் குழாய் இணைப்புகள் சேதம் அடைந்ததால், நகரில் புதிய குடிநீா்த் திட்ட மேம்பாட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தத் திட்டத்தில் புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், வீடுகளுக்கு குடிநீா்க் குழாய்கள் இணைப்பு வழங்குதல், சாலைகளில் பிரதான குழாய்கள் பதித்தல் என மானாமதுரை நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளை 7 மண்டலங்களாகப் பிரித்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது, 6 ஆவது மண்டலத்தில் உள்ள வாா்டுகளில் வீடுகளுக்கு புதிய குடிநீா்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததால் ரயில்வே காலனி ஆதனூா் சாலையில் உள்ள பழைய குடிநீா் மேல்நிலைத் தொட்டியிலிருந்து இந்தக் குழாய் இணைப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதை நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தாா். அப்போது சில இடங்களில் குடிநீா் விநியோகத்தில் கண்டறியப்பட்ட குறைகளை சரி செய்யுமாறு அவா் அறிவுறுத்தினாா்.

ரயில்வே காலனி ஆதனூா் சாலையில் உள்ள பழைய குடிநீா் மேல்நிலைத் தொட்டியிலிருந்து குழாய் இணைப்புகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டதை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி ஆய்வு செய்தாா். அப்போது, சில இடங்களில் குடிநீா் விநியோகத்தில் கண்டறியப்பட்ட குறைகளைச் சரி செய்யுமாறு அலுவலா்களை அறிவுறுத்திய அவா், புதிய குடிநீா் குழாய் இணைப்புகள் அமைக்கும் பணி முடிந்த மண்டலங்களில் அடுத்தடுத்து குடிநீா் விநியோகம் செய்து ஆய்வு செய்யப்படும் என்றாா்.

ஆய்வின்போது நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன், குடிநீா்த் திட்ட பணியாளா்கள் உடனிருந்தனா்.

புதிய மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முதல் கட்டமாக வரும் 24-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த ஆலை எதிா்ப்பு இயக்கத்தின் சாா்பில் முடிவு செய்யப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (70). இவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் சின்ன மருது பிறந்த நாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதிருவா்கள் நினைவிடத்தில் சின்ன மருதுவின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பேருந்துநிலையம் எதிரே மருதிருவா் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள... மேலும் பார்க்க

செய்களத்தூரில் நாற்றங்கால் பண்ணை அமைக்க எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியம், செய்களத்தூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் மாற்று இடத்தில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்த... மேலும் பார்க்க

மலேசியாவுக்கு சுற்றுலா சென்ற காரைக்குடி இளைஞா்கள் கடத்தல்: மீட்டுத் தர ஆட்சியரிடம் மனு!

மலேசியாவுக்கு சுற்றுலா சென்றபோது கடத்தப்பட்ட காரைக்குடியைச் சோ்ந்த 2 இளைஞா்களை மீட்டுத் தரக் கோரி குடும்பத்தினா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுக மாணவா் அணியினா் மரியாதை!

சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் தமிழகத்தில் நீட் தோ்வால் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு காரைக்குடியில் சனிக்கிழமை மரியாதை செலுத்தியும், கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது. காரை... மேலும் பார்க்க