மின்சார பேருந்துகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட மாட்டாது: அமைச்சர் சிவசங்க...
புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!
டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து, நீரஜ் சோப்ரா புதிய சாதனையைப் படைத்தார்.
ஹரியாணாவை சோ்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சா்வதேச களத்தில் சிறந்து விளங்கி இந்தியாவுக்கு பெருமை சோ்த்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித் தந்துள்ளார்.
கத்தார் நாட்டின் தோகாவில் டைமண்ட் லீக் தடகளத்தின் 16-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்களான நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா, பாருல் சௌத்ரி, குல்வீர் சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் அதிகளவிலான இந்திய வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறை.
இந்த நிலையில், தனது 18-வது டைமண்ட் போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, 90.23 மீ் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையைப் படைத்தார். இதன் மூலம், இந்த சாதனையை எட்டிய மூன்றாவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக 25-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார், நீரஜ் சோப்ரா.
போட்டியில் முதலிடத்தை ஜெர்மனி வீரர் ஜூலியன் வெபர் (91.06 மீ) பெற்றிருந்தாலும், நீரஜ் சோப்ராவின் சாதனை பெருமைக்குரியதே என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மற்றோர் இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீ தூரம் எறிந்து, எட்டாவது இடத்தைப் பிடித்தார்.