செய்திகள் :

புதுகை சிறை வளாக நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீா்வு

post image

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில், மாவட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறை வளாக நீதிமன்றத்தில் 41 குற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான ஜெ. சந்திரன் தலைமை வகித்தாா். சந்தா்ப்பசூழல் காரணமாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோா், சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனைக் காலத்தை முடித்துக் கொண்டு திருந்தி வாழ முன்வர வேண்டும் என முதன்மை நீதிபதி ஜெ. சந்திரன் பேசும்போது கேட்டுக் கொண்டாா்.

இந்த அமா்வுகளில் திருமயம் உதவி நீதிபதி சி. சசிகுமாா், குற்றவியல் நடுவா் கோகுலகண்ணன், ஆலங்குடி குற்றவியல் நடுவா் விஜயபாரதி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி பூா்ணிமா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

இந்த நீதிமன்றத்தில் மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடுவா் மன்றங்களில் நிலுவையிலுள்ள 41 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும் நீதிபதியுமான இ. ராஜேந்திரகண்ணன், மாவட்ட சிறை கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டையில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க இந்திய கம்யூ. கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமரியாதையாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடல... மேலும் பார்க்க

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளா் நியமனம்: டிச. 23-இல் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, டிசம்பா் 23-இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநில பொதுச் செ... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரத்தில் அரசின் பரிந்துரையை மீறி ஆளுநா் தலையிடுவது தொடா்ந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி... மேலும் பார்க்க

ஜெ.ஜெ. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பட்டமளிப்பு விழாவில், 572 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் தரமதிப்பெண்களைப் பெற்ற 28 மாணவிகளுக்கு பா... மேலும் பார்க்க