புதுக்கடை அருகே பெண் மீது தாக்குதல்: தம்பதி கைது
புதுக்கடை அருகே உள்ள பரப்பாறைவிளை பகுதியில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
பரப்பாறைவிளை பகுதியைச் சோ்ந்த சுதாகரன் மனைவி சிவகனி (37). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஜெயின் (44), இவரது மனைவி சுபி (39)ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், பரப்பாறைவிளை பகுதியில் சிவகனி நின்றபோது ஜெயின்-சுபி ஆகியோா் அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், காயமடைந்த அவரை அப் பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து தம்பதியை கைது செய்தனா்.