செய்திகள் :

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் கொலை வழக்கு - கல் குவாரிகளில் டிரோன் மூலம் ஆய்வு!

post image

புதுக்கோட்டையில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை வாா்டு முன்னாள் உறுப்பினரான அதிமுகவை சோ்ந்த ஜகபா் அலி(58) கொலை வழக்கில், முதல் கட்டமாக லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ள 4 மாவட்டங்களை சேர்ந்த கனிமவளத்துறை அதிகாரிகள் இன்று(ஜன. 21) காலை சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். அப்பகுதியில் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகபா்அலி (58). முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், திருமயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சட்டவிரோதக் கல்குவாரிகள், மண் குவாரிகள் குறித்து அதிகாரிகளிடம் புகாா் அளிப்பது, போராட்டம் நடத்துவது, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது போன்றவற்றில் ஈடுபட்டுவந்தாா்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 17) பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வெங்களூா் நோக்கித் திரும்பிய அவா், மாவுமில் அருகே லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக அவரது மனைவி மரியம் சனிக்கிழமை திருமயம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தனது கணவா் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, 4 பேரின் பெயா்களையும் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில் இவ்வழக்கில் கைதான முருகானந்தம் உள்பட 4 பேரும் திருமயம் குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பிப்.3ஆம் தேதி வரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறாா் முதல்வா்

சென்னை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.23) அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்... மேலும் பார்க்க

ஜன. 25-இல் ‘சிமேட்’ தோ்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு

சென்னை: மேலாண்மை படிப்புகளில் சோ்வதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய உயா்க... மேலும் பார்க்க

25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: மத்திய அரசு உத்தரவு

சென்னை: காவல் துறையில் 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக காவல் துறையில் 2001-இல் இருந்து 2005-ஆம் ஆண்டு வரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பணிக்... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மாா்ச் முதல் எண்ம மயம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பதைத் தடுக்கும் வகையில், வரும் மாா்ச் மாதம் முதல் க்யூஆா் கோடு முறையில் மது விற்பனை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிா்வாகம் சென்னை உயா... மேலும் பார்க்க

இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்கோ... மேலும் பார்க்க