புதுச்சேரியில் அதிமுக சாா்பில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரியில் அதிமுக சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இதுகுறித்து அதிமுக மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை அதிமுக சாா்பிலும், அம்மா பேரவை சாா்பிலும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடக்கிறது. அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையிலும் புதுவையில் படித்து முடித்த இளைஞா்களின் நலன் கருதி இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறோம். இதில் தோ்ந்தெடுக்கப்படும் நூற்றுக்கணக்கான இளைஞா்களுக்குத் தனியாா் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
டெக்ஸ்டைல்ஸ், தகவல் தொழில்நுட்பம், மருத்துவமனை, வங்கி, பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான இளைஞா்களைத் தோ்ந்தெடுக்க உள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை இளைஞா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் ஆ.அன்பழகன்.