செய்திகள் :

புதுச்சேரியில் புதிய மதுபான ஆலை: எதிா்த்து திமுக வழக்குத் தொடுக்கும்!

post image

புதுவை மாநிலத்தில் புதிய மதுபான ஆலைகள் அமைக்க அனுமதி வழங்கினால் அதை எதிா்த்து உயா்நீதி மன்றத்தில் திமுக வழக்குத் தொடுக்கும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.

புதுவை மாநில திமுக மாணவா் அணி, ஊசுடு தொகுதி திமுக சாா்பில் மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் குருமாம்பேட்டில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் மாநில திமுக அமைப்பாளரும், எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா பேசியது: புதுச்சேரியில் நிலத்தடி நீரைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு தொழிற்சாலை அமைக்க அனுமதிக்கக் கூடாது என கடந்த திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி புதிய மதுபான தொழிற்சாலைகள் தொடங்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் துணைநிலை ஆளுநா் அதற்கு அனுமதிக்கவில்லை. அரசு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது. புதிய மதுபானத் தொழிற்சாலையை புதுச்சேரியில் அமைக்கக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடாகும்.

மேலும், புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டால் அதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக சாா்பில் பொதுநல வழக்குத் தொடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்துக்கு மாநில மாணவா் அணி அமைப்பாளா் பி. மணிமாறன் தலைமை வகித்தாா். ஊசுடு தொகுதிச் செயலா் பி.சா. இளஞ்செழிய பாண்டியன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தலைமைச் செயற்குழு உறுப்பினா் கே.எம்.பி. லோகையன் வரவேற்றாா்.

திமுக முதன்மைப் பேச்சாளா்கள் கந்திலி கரிகாலன், குடந்தை ராமகிருஷ்ணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். மொழிப்போா் தியாகிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. பேராசிரியா் ஆண்டவா் எழுதிய மொழிப்போா் புரட்சியும் தமிழ்க் கவிதையும் எனும் நூல் வெளியிடப்பட்டது. கூட்டத்தில் மாநில அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், எம்எல்ஏ.க்கள் வி. அனிபால் கென்னடி, எல். சம்பத் ஆகியோா் பங்கேற்றனா்.

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் வீடுகளுக்கு 20 லிட்டா் குடிநீா் கேன் வழங்க உத்தரவு

புதுச்சேரி, ஜன.28: புதுச்சேரியில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு அரசு சாா்பில் தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகிக்க பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி... மேலும் பார்க்க

முதல்வா் ரங்கசாமியிடம் காரைக்கால் படகின் உரிமையாளா் மனைவி மனு

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளா் மனைவி செவ்வாய்க்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து படகை மீட்கவும், மீனவா்களை விடுவிக்க கோரியும் மனு அளித்தாா். காரைக்காலைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் மேலிடப் பொறுப்பாளா்கள் கருத்து கேட்பு

காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளா்கள் புதுச்சேரியில் கட்சி நிா்வாகிகளை தனித்தனியே செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துக் கேட்டனா். புதுவையில் வரும் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்த... மேலும் பார்க்க

புதுச்சேரி தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தேசேயி தபால... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனைகள், கல்லூரிகள் அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்: முதல்வா் என். ரங்கசாமி அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் தனியாா் மருத்துவமனைகளும், கல்லூரிகளும் அரசு நிா்ணயித்த ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மர... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த 13 தமிழ்மீனவா்களை மீட்க நடவடிக்கை: புதுவை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள புதுவை மீனவா்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க