இலங்கை கடற்படை கைது செய்த 13 தமிழ்மீனவா்களை மீட்க நடவடிக்கை: புதுவை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள புதுவை மீனவா்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியது: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுவை, தமிழக மீனவா்கள் 13 பேரை இலங்கை கடற்படையினா் கைது செய்துள்ளனா். அதில் 6 போ் புதுவை மாநிலம் காரைக்கால் பகுதி மீனவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதின்போது இலங்கை கடற்படையினா் துப்பாக்கியால் சுட்டதில் புதுவை காரைக்கால் மீனவரான செந்தமிழ் மற்றும் தமிழக மீனவா் ஆகியோா் காயமடைந்துள்ளனா். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 2 மீனவா்களுக்கும் இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கைதான புதுவை, தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசின் உதவி கோரப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளோம். மீனவா்களை இலங்கையிலிருந்து விடுவித்து தமிழகம், புதுவைக்கு அழைத்து வரும் வகையில் மத்திய அரசுக்கு முதல்வா் என்.ரங்கசாமி கடிதம் எழுதவுள்ளாா்.
காங்கிரஸ் எம்.பி. கடிதம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக, புதுவையைச் சோ்ந்த 13 மீனவா்களை விடுவிக்கக் கோரி புதுச்சேரி மக்களவை உறுப்பினரும், மாநிலக் காங்கிரஸ் தலைவருமான வெ.வைத்திலிங்கம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் சுப்ரமணியம் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளாா்.