சிபிஐ ‘பாரத்போல்’ தளம் அறிமுகம்! மாநில, மத்திய, சர்வதேச முகமைகள் ஒத்துழைப்புடன் ...
புதுச்சேரியில் பொங்கல் பரிசாக ரூ.750 அறிவிப்பு
புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியது.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்க வேண்டும் என பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தை போல புதுச்சேரியிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.750 வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த தொகை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.