Rain Alert: இன்று காலை 10 மணி வரை எந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?
புதுச்சேரியில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்று
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் கரையை கடந்ததையொட்டி, புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது.
மேலும், பலத்த மழை காரணமாக நகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக மாறின.
புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் இரவு 8 மணி வரை ஒரே நாளில் 102 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, பாகூரில் 95, பத்துக்கண்ணில் 5.2, திருக்கனூரில் 3.9 மி.மீ. மழை பதிவானது.
அனைத்துத் துறை அதிகாரிகளும் சனிக்கிழமை இரவு முழுவதும் சுழற்சி முறையில் புயல் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.