செய்திகள் :

புதுச்சேரியில் 3 புதிய நியமன எம்.எல்.ஏக்கள் நியமனம்

post image

புதுச்சேரியில் பாஜகவைச் சேர்ந்த 3 பேர் புதிய நியமன எம்.எல்.ஏக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த பாஜகவின் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில், தற்போது அக்கட்சியைச் சேர்ந்த மூவர் புதிய நியமன எம்.எல்.ஏ.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வரும் 15ம் தேதி சட்டப்பேரவையில் இவர்கள் பதவியேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சராக ரங்கசாமியும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவியும், துணை பேரவைத் தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது.

அதேபோல் பாஜகவில் இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து பாஜக கட்சியை சேர்ந்த ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் வெங்கடேசன் ஆகிய மூவருக்கு நியமன சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் நியமன சட்டப்பேரவை உறுப்பினராக செயல்பட்டு வந்தனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக்பாபு ஆகியோர் தங்களது பதவியை அண்மையில் ராஜிநாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 new BJP MLAs have been appointed in Puducherry.

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்

2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.மதுரையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில், தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது... மேலும் பார்க்க

காவலாளி அஜித்குமார் மரண வழக்கு- சிபிஐ வழக்குப்பதிவு

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா், அவரது சகோதரா் நவ... மேலும் பார்க்க

அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல... மேலும் பார்க்க

விசாரணையில் தொய்வு: ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐஜி அலுவலகத்தில் மனு

கோவை : ரிதன்யா தற்கொலை வழக்கு விசாரணை தொய்வாக நடப்பதாகக் கூறி, அவரது தந்தை அண்ணாதுரை, கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விசாரணை தொய்வாக இரு... மேலும் பார்க்க

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க