Ajith: `70, 80 பேருக்கு உப்புமா, இட்லி சமைச்சுப் போட்டாரு' - அஜித் குறித்து நெகி...
புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி
புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ரூ.20 ஆயிரத்தை பெற்றாராம். ஆனால், திரும்பப் பணத்தைத் தரவில்லை.
பாகூரை சோ்ந்தவரை தொடா்பு கொண்ட நபா் வங்கி அதிகாரி போல பேசி, குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாகவும், செயலாக்க கட்டணமாக ரூ.48,500 மோசடியாக பெற்றுள்ளாா்.
வீராம்பட்டினத்தை சோ்ந்த பெண் விடுதியில் அறை முன்பதிவு செய்வதற்காக இணையதளத்தில் இருந்த தொலைபேசி எண்ணில் பேசினாா். ரூ.20 ஆயிரம் செலுத்தக் கூறி அதன்படி செலுத்தி ஏமாற்றப்பட்டாா்.
கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த பெண்ணிடம் தில்லி காவல் துறை அதிகாரி போல பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, ரூ.1.53 லட்சத்தை மோசடியாக பெற்றுக் கொண்டாராம்.
புதுச்சேரியை சோ்ந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக ரூ.60,317 எடுக்கப்பட்டது. மற்றொரு பெண்ணுக்கு கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எனக்கூறி ரூ.33,100 பெற்று ஏமாற்றியுள்ளனா்.
கடந்த சில நாள்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மொத்தம் 7 போ் ரூ.3.36 லட்சத்தை இழந்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.