Robin Uthappa: ரூ. 23 லட்சம் PF மோசடி... உத்தப்பாவிற்குக் கைது வாரண்ட்; பின்னணி ...
புதுச்சேரியில் 800 கிலோ எடையில் "கிங்காங்" சாக்லெட் சிற்பம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 800 கிலோ எடையில் "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சாக்லெட் கிங்காங்கை புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
சுற்றுலா நகரமான புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள பேக்கரி கடை ஒன்றில் சாக்லெட் மூலம் தலைவர்களின் உருவம் செய்து அவ்வப்போது வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம்.
இதையும் படிக்க |தங்கம், வெள்ளி விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
அந்தவகையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நடிகர் ரஜினிகாந்த், விங் கமாண்டர் அபிநந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் உருவங்களை சாக்லெட் கொண்டு தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் அலாவுதீன் பூதம் போன்ற சாக்லெட் சிலையும் தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் 7.2 அடி உயரத்தில் 800 கிலோ சாக்லேட் கொண்டு "கிங்காங்" உருவத்திலான சாக்லெட் சிற்பத்தை பிரம்மாண்டமாக தயாரித்து காட்சிப்படுத்தியுள்ளனா்.
இது முழுக்க முழுக்க சாக்லெட் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிற்பத்தை செப் ராஜேந்திரன் தங்கராசு தயாரித்துள்ளார்.
இந்த சாக்லெட் "கிங்காங்" சிலையை புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடனும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். சிலர் அதன் அருகே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.