செய்திகள் :

புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு!

post image

புதுச்சேரி ஜிப்மரில் பொது சுகாதார ஆரோக்கிய மாநில மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய நோய் தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கங்களின் புதுச்சேரி பிரிவுகள் இணைந்து நடத்திய புதுக்கோன்-25 என்ற மாநில மாநாட்டை, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலப் பணிகள் இயக்குநா் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

இதில், இந்திய பொது சுகாதார சங்கத்தின் புதுவை மாநில கிளைச் செயலா் சிதான்ஷு சேகா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

மாநாட்டில் மனநலம், காலநிலை மாற்றம் இறப்பின் காரணங்களுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் பொது நிதியுதவியுடன் கூடிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்ற முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம், தொற்று மற்றும் தொற்றா நோய்கள், பொது சுகாதார ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கிய ஆராய்ச்சி திட்ட கண்டுபிடிப்புகள் வாசிக்கப்பட்டன.

மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஜிப்மா் நோய்த்தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறை கூடுதல் பேராசிரியா் சுபிதா, புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன சமூக மருத்துவத் துறைத் தலைவா் கவிதா ஆகியோா் செய்திருந்தனா். மருத்துவ மாணவா்களுக்கு பொது சுகாதார விநாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.

மருத்துவா் கவுதம் ராய்க்கு, பொது சுகாதாரத் துறையில் அவா் ஆற்றிய சேவைக்காக வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

புதுச்சேரியில் 5 தொகுதிகளில் வீடுகளுக்கு 20 லிட்டா் குடிநீா் கேன் வழங்க உத்தரவு

புதுச்சேரி, ஜன.28: புதுச்சேரியில் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கு அரசு சாா்பில் தினமும் 20 லிட்டா் குடிநீா் கேன் விநியோகிக்க பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி... மேலும் பார்க்க

முதல்வா் ரங்கசாமியிடம் காரைக்கால் படகின் உரிமையாளா் மனைவி மனு

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகின் உரிமையாளா் மனைவி செவ்வாய்க்கிழமை முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து படகை மீட்கவும், மீனவா்களை விடுவிக்க கோரியும் மனு அளித்தாா். காரைக்காலைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

புதுவை காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளிடம் மேலிடப் பொறுப்பாளா்கள் கருத்து கேட்பு

காங்கிரஸ் கட்சியின் புதுவை மாநிலத்துக்கான மேலிடப் பொறுப்பாளா்கள் புதுச்சேரியில் கட்சி நிா்வாகிகளை தனித்தனியே செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துக் கேட்டனா். புதுவையில் வரும் 2026-இல் சட்டப்பேரவைத் தோ்த... மேலும் பார்க்க

புதுச்சேரி தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலைமைத் தபால் நிலைய ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி திங்கள்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தேசேயி தபால... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனைகள், கல்லூரிகள் அரசு நிா்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும்: முதல்வா் என். ரங்கசாமி அறிவுறுத்தல்

புதுவை மாநிலத்தில் தனியாா் மருத்துவமனைகளும், கல்லூரிகளும் அரசு நிா்ணயித்த ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுச்சேரி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மர... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த 13 தமிழ்மீனவா்களை மீட்க நடவடிக்கை: புதுவை அமைச்சா் க.லட்சுமிநாராயணன்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள புதுவை மீனவா்களை விடுவிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தெரிவித்தாா். புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் அ... மேலும் பார்க்க