செய்திகள் :

புதுச்சேரி ஜோடி: ஆகாயத்தில் `லவ்' ப்ரொபோசல்… கடலுக்கு அடியில் திருமணம்! - நெகிழும் மணமக்கள்

post image

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜான் பிரிட்டோ - தீபிகா. இவர்கள் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டது. அதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தீபிகாவை சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு அழைத்து சென்ற ஜான் பிரிட்டோ, பாரா கிளைடரில் பறந்து வந்து `Will u marry me?’ என்ற வாசகங்களுடன் லவ் ப்ரொபோசல் செய்தார்.

திவ்யா அதை ஏற்றுக் கொண்ட நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. இருவருமே ஆழ்கடல் பயிற்சியாளர்கள் என்பதால் கடலுக்கு, அடியில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஜான் பிரிட்டோவிடம் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார் தீபிகா.

ஜான் பிரிட்டோ - தீபிகா

அதற்கு அவரும் சம்மதிக்க, ஆழ்கடல் பயிற்சியாளர்களின் துணையுடன் இன்று இருவருக்கும் கடலுக்கு அடியில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடல் பகுதியை தேர்வு செய்தனர். கடலுக்கு அடியில் 50 அடி ஆழத்திற்கு திருமண ஆடையுடன் மணமக்கள், மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் குறித்துப் பேசிய மணமக்கள், ``காற்று மாசுபாடு, கடல் வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் கடல் மாசுபாட்டை தடுப்பது குறித்த விழிப்புணர்வுக்காகவே, ஆழ்கடல் பயிற்சியாளரான நாங்கள் கடலுக்கு அடியில் திருமணம் செய்து கொண்டோம்” என்று நெகிழ்கின்றனர்.

குழந்தை வளர்ப்பில் குடும்பம், சமூகம், பணிச்சூழல் பெண்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன? | Survey

'வீட்டை மட்டுமே பார்த்துக் கொண்டால் போதும்' என்று சொல்லி முடக்கப்பட்ட பெண்கள்... வேலை, தொழில் என இன்று முன்னேறி வருகிறார்கள். ஆனால், மகப்பேறு, குழந்தைப் பிறப்பு, குழந்தை வளர்ப்பு உள்ளிட்டவற்றில் பெண்க... மேலும் பார்க்க

தமிழ்ச் சமூகத் திருமணங்கள்: `பரிசப்பணம் டு தலைப்பாகை ; ஊரான் டு பட்டக்காரர்’ - மலையாளிகள் திருமணம்

மலையாளிகள்தமிழகத்தில் ஜவ்வாது மலை, கொல்லி மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, சித்தேரிமலை போன்ற மலைப்பகுதிகள், ஓமலூர், ஊத்தங்கரை போன்ற சமவெளிப் பகுதிகளில் வாழும் பழங்குடிகளே மலையாளிகள். சேலத்தை ஒட்டியுள்ள ... மேலும் பார்க்க

`கடற்கரையும் எனது தோழியும்..' ஒரு உண்மை அனுபவம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

நமக்குள்ளே... பழையன கழிதல், புதியன புகுதல்... பொங்கல் சொல்லும் எவர்கிரீன் மெசேஜ்!

பொங்கல் பண்டிகையின் மகிழ்ச்சியில் உள்ளன நம் வீடுகள். உறவுகள் கூடல், சிறப்பு உணவுகள், நல் நம்பிக்கைகள் கைகூடச் செய்யப்படும் சடங்குகள் என மனம் தித்திக்கக் கிடக்கிறோம். ஓய்வில்லாமல் ஓடும் தினசரிகளுக்கு எ... மேலும் பார்க்க

எல்லா கடை கடிகாரத்திலும் 10:10 என நேரம் காட்டுவது ஏன்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க