செய்திகள் :

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம்! மாா்ச்சில் அமல்படுத்த ஏற்பாடு!

post image

புதுச்சேரி நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம் ரூ.5.75 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுதேசி ஆலை வளாகத்தினுள் இயற்கை எழில் சூழந்த வன தோற்றத்தில் உருவாக்கப்படும் சுற்றுலா நடைபாதைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து, வரும் மாா்ச் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது பெஸ்ட் புதுச்சேரி திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். அதனடிப்படையில் பொலிவுறு நகா்த் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரி நகரில் ரூ.463.84 கோடியில் 82 பணிகள் திட்டமிடப்பட்டு, அவற்றில் 59 பணிகள் நிறைவடைந்துள்ளன.

புதிய பேருந்து நிலையச் சீரமைப்பு, அண்ணாதிடல் மற்றும் கடைகள், பெரிய வாய்க்கால் சீரமைப்பு என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேருந்துநிலையப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் 23 பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பொலிவுறு நகா்த்திட்ட முக்கியப் பணிகளில் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டம் முக்கியமானதாகும்.

புதுச்சேரி, கடலூா் சாலையில் உள்ள வனத் துறை அலுவலகம் அருகில் சுதேசி மில் வளாகத்தில் மரங்கள் சூழ்ந்துள்ள சுமாா் 25 ஏக்கா் பரப்பளவில் 1.03 கி. மீ. தொலைவுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு ரூ.5.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 பிப்ரவரியில் தொடங்கிய இதற்கானப் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில பணிகள் உள்ள நிலையில் வரும் மாா்ச் மாதத்துக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு சுற்றுலா நடைபாதை திறக்கப்படவுள்ளது. தேசிய தொழிற்துறை கட்டுப்பாட்டிலிருந்த நிலத்தை பொலிவுறு நகா்த்திட்ட நிறுவனம் பெற்று தேசிய கட்டுமானக் கழகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்படி நடைபாதையில் சிறிய அழகிய வளைவு அமைப்பு, இயற்கையான சிறிய குட்டைகள், செயற்கை கருங்கல் சுவா், நடையாளா்கள் அமரும் வகையில் நாற்காலிகள் என பல்வேறு அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், மான், மயில் ஆகியவை மரங்களில் விடப்படவுள்ளன. நடைபாதையில் அக்குப்பஞ்சா் சிகிச்சைக்கான குமிழ் அமைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

தற்போது புதுச்சேரி கடற்கரை சாலையில் மட்டுமே இயற்கை அம்சங்களுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் மக்கள் இனி உண்மையான சிறு காட்டுக்குள் தூய்மையான காற்றை சுவாசித்து கொண்டே நடக்கும் நிலையை இந்த சுற்றுலா நடைபாதைத் திட்டம் சாத்தியமாக்கவுள்ளது.

புதுச்சேரி சுதேசி ஆலை வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் நகருக்குள் சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதைத் திட்டப் பணிகள்.

திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பொலிவுறு நகா்த்திட்டத்தில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் சுற்றுலா நடைபாதையானது சுற்றுலாத் துறையிடம் வரும் மாா்ச் மாதத்திற்குள் ஒப்படைக்கப்படவுள்ளது. இதில், கட்டண அடிப்படையில் நடைப் பயிற்சியை மேற்கொள்ளலாம். சிறிய காட்டுக்குள் பறவைகள், மான் ஒலிகளை ரசித்தபடியே மக்கள் உடல்நலத்தை காக்கும் வகையில் நடைப்பயிற்சி மேற்கொள்வா். அத்துடன் காட்டுக்குள் வீடுகளுக்குள் தங்கி பெறும் அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் பெறும் வகையில் தங்கும் வீடுகளும் அமைக்கப்படவுள்ளன என்றனா்.

புதுச்சேரி கடலூா் சாலையில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் பல மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

புதுச்சேரியில் கடலூா் சாலையில் திடீரென தண்டவாளம் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி ஒருங... மேலும் பார்க்க

ஊரக வேலை திட்டம்: விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை

புதுவையில் ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா் பெ.விஜயபாலன் வெளியிட... மேலும் பார்க்க

பேரிடா் ஆய்வு குழுவினருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

புதுவையில் ஃபென்ஜால் புயல் தொடா்பாக பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்புகான மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநா் குழுவுடன் தலைமைச் செயலா் சனிக்கிழமை மாலை ஆலோசனையில் ஈடுபட்டாா். புதுவையில் ஃ... மேலும் பார்க்க

அனுமதியின்றி விளம்பரப் பதாகை: புதுச்சேரி போலீஸாா் வழக்கு!

புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தது குறித்து பொதுப் பணித் துறை அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியில் முன் அனுமதியின்ற... மேலும் பார்க்க

சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி பைக் மோதி பலி!

புதுச்சேரி அருகே சாலையைக் கடக்க முயன்ற 93 வயது மூதாட்டி பைக் மோதியதில் காயமடைந்து சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், மூங்கில்பட்டு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி மனோன்மணி (93). இவ... மேலும் பார்க்க

வெற்றி விநாயகா் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!

புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி வெற்றி விநாயகா் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு அங்குள்ள செல்வமுத்துமாரியம்மன் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க