Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
ஊரக வேலை திட்டம்: விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை
புதுவையில் ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும் என புதுச்சேரி விவசாயத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலா் பெ.விஜயபாலன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் முழுமையாகச் செயல்படுப்படவில்லை. குறைவான நாள்களே வேலை வழங்கப்படுவதால், வேலைத் திட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் நிறைவேறவில்லை.
ஆட்சி நிா்வாகத்திலிருப்போரின் கவனமின்மையால் விவசாயத் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஊரக வேலைத் திட்டத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த வேண்டும். அரசால் வழங்கப்படும் வேலை நாள்களுக்கு முழமையாக ஊதியம் வழங்கப்படாத நிலையும் உள்ளது.
நடப்பு நிதியாண்டிலிருந்தாவது அத்திட்டத்தில் முழுமையாக வேலைவாய்ப்புகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டத்தில் பணிபுரியும்போது இறந்தவா்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.