வெற்றி விநாயகா் கோயிலில் திருவிளக்கு வழிபாடு!
புதுச்சேரி இலாசுப்பேட்டை தொகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி வெற்றி விநாயகா் கோயிலில் 108 திருவிளக்கு வழிபாடு அங்குள்ள செல்வமுத்துமாரியம்மன் சந்நிதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திருவிளக்குகளை ஏற்றி பூஜை நடத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் புதுவை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் வி.பி.சிவக்கொழுந்து பங்கேற்று திருவிளக்குப் பூஜையில் பங்கேற்றவா்களுக்கு பரிசு, பிரசாதங்களை வழங்கினாா். ஏற்பாடுகளை சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளா் வி.பி.எஸ்.ரமேஷ்குமாா் செய்திருந்தாா்.
பூஜையில் கோயில் அறங்காவலா் குழுவினா்கள் சிவகுருநாதன், மாரிமுத்து, வேலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.