Suresh Gopi: "பழங்குடியினர் துறைக்கு 'உயர் வகுப்பு' அமைச்சர்" - சுரேஷ் கோபியின் ...
அனுமதியின்றி விளம்பரப் பதாகை: புதுச்சேரி போலீஸாா் வழக்கு!
புதுச்சேரியில் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைத்தது குறித்து பொதுப் பணித் துறை அளித்த புகாரின்பேரில், முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் முன் அனுமதியின்றி விளம்பரப் பதாகை வைக்கக் கூடாது என உள்ளாட்சித் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலா் விதியை மீறி விளம்பரப் பதாகைகளை வைத்து வருகின்றனா். புதுச்சேரி நகரில் எஸ்.வி.படேல் சாலையில் அனுமதியின்றி சில விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதாகப் புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து பொதுப் பணித் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பதாகைகள் வைக்கப்பட்டதை பாா்வையிட்டு உறுதிப்படுத்தினா். அதன்பின் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் ஸ்ரீநிவாஸ் புகாா் அளித்தாா். அதன்பேரில் முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.