செய்திகள் :

புதுச்சேரி: பிரபல தாதா தெஸ்தான் மகன் உட்பட 3 பேர் வெட்டிப் படுகொலை! - பின்னணியை விவரிக்கும் போலீஸார்

post image

புதுச்சேரியின் மையப் பகுதியில் இருக்கும் ரெயின்போ நகர், அடர்த்தியான குடியிருப்புப் பகுதி. அதில் 7-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பாழடைந்த ஒரு வீட்டில், மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக இன்று காலை  பெரியகடை போலீஸாருக்கு தகவல் சென்றது. அதனடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்தனர். அப்போது அரிவாளால் தலை, முகங்கள் சிதைக்கப்பட்டு கிடந்தவர்களிடம் வெளியேறிய ரத்தம் தரையில் வழிந்தோடியது. அவர்களில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிய போலீஸார், மற்ற இருவரது சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவர்கள்

அதையடுத்து அங்கு தடயங்களை சேகரித்த போலீஸார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டது ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரிஷி, தீடீர் நகரைச் சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. அதேபோல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆதி என்பவரும், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். அதனால் கொலையின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது. இதில் ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரிஷி என்பவர், பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பிரபல தாதா தெஸ்தானின் மகன் என்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரௌடி முகிலனுக்கும், அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ரௌடி விக்கி என்ற விக்னேஸ்வரனுக்கும் இடையே தங்களுக்கு யார் பெரிய ரௌடி என்பதில் போட்டி இருந்தது. அதில் ஒருமுறை ரௌடி விக்கியை கொலை செய்ய முயன்று தோற்றிருக்கிறான் முகிலன். அதன்பிறகு வேறு ஒரு வழக்கில் சிறைக்குச் சென்ற முகிலனுக்கு, நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த புகழ் என்ற ரௌடியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறையில் இருந்து வெளியே அந்த முகிலன், விக்கி தன்னை பழிவாங்க முயற்சிப்பான் என்று தெரிந்து நெல்லிக்குப்பத்திலிருந்த சிறை நண்பன் புகழிடம் சென்றிருக்கிறான்.

ஒரே நாளில் மூன்று பேர் கொலை

ஆனால் அதை மோப்பம் பிடித்த விக்கி டீம், 2023 ஆகஸ்ட் 18-ம் தேதி நெல்லிக்குப்பத்தில் மது குடித்துக் கொண்டிருந்த முகிலனை வெட்டிப் படுகொலை செய்தது. முகிலனின் நண்பர்களான ரிஷி, ஆதி, தேவா போன்றவர்கள், தங்கள் நண்பனை கொலை செய்த விக்கியை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்கள். ஆனால் அந்த திட்டத்தை தெரிந்து கொண்ட விக்கி டீம், இவர்கள் மூவரையும் முந்திக் கொண்டு கொலை செய்திருக்கலாம். அதேபோல டி.வி நகரில் சத்யா, சங்கர் என்று இரண்டு ரௌடிகள் இருக்கிறார்கள்.

இந்த சத்யா மீது 5 கொலை வழக்குகள் இருக்கின்றன. மேலும் 16 வயதிலேயே கொலைக் குற்றவாளியானவன் சங்கர். இந்த சங்கரின் வீடு தற்போது கொலை நடந்த பகுதியில் இருக்கிறது. கொலையானவர்கள் ரௌடி விக்கிக்கு போட்ட ஸ்கெட்ச்சை, தனக்கானது என்று நினைத்துக் கூட சத்யா கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயர... மேலும் பார்க்க

திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்க... மேலும் பார்க்க

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை... மேலும் பார்க்க

மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?

சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்... மேலும் பார்க்க

`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து... மேலும் பார்க்க

புதுச்சேரி: 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியரை துவைத்த பெற்றோர்கள்; தனியார் பள்ளி சூறை

புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி . புதுச்சேரி பா.ஜ.க-வின் விவாசாய அணித் தலைவர் ராமுவுக்கு சொந்தமான இந்தப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க