புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை
பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா். சனிக்கிழமை சங்காபிஷேகமும், ஞாயிற்றுக்கிழமை சண்டிகா பரமேஸ்வரி யாகமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோவில் விழாக் குழுவினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.