ஷங்கர் படத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தேன்: பவன் கல்யாண்
புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் 1,725 மாணவிகளுக்கு பற்று அட்டை!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 1,725 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான பற்று அட்டையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் திங்கள்கிழமை வழங்கினாா்.
கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகள் 1,725 மாணவிகள் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டனா். இந்த நிகழ்ச்சியில், அவா்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான பற்று அட்டையை பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினாா்.
ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் செ.முருகேசன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் தேன்மொழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சின்னராசு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், கீழக்கரை நகா்மன்றத் தலைவி செஹானாஸ் ஆபிதா, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத் தலைவா் புல்லாணி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வா் நிா்மல் கண்ணன், கீழக்கரை வட்டாட்சியா் ஜமால் முகம்மது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.