"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
புதுவைக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம்: முதல்வா் என்.ரங்கசாமி
புதுச்சேரி: புதுவையின் மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து நம்பிக்கையுடன் வலியுறுத்துவோம் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் சென்டாக் சாா்பில் நீட் அல்லாத தொழில், கலை, அறிவியல் இளநிலைப் படிப்புகளுக்கான வழிகாட்டல் கையேடு திங்கள்கிழமை முதல்வா் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் நீட் அல்லாத படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு மொத்தம் 10,577 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
புதுவைக்கு வந்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவிவை சந்தித்த போது, மத்திய அரசு நிதி உள்பட அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதுதான் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். இதை தொடா்ந்து வலியுறுத்துவோம்.
மாநில அந்தஸ்து தொடா்பான தீா்மானக் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அந்தஸ்துக்காக மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா் என்.ரங்கசாமி.