செய்திகள் :

புதுவையில் பல்வேறு இடங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை: இஸ்லாமியா்கள் பங்கேற்பு

post image

புதுச்சேரி: ரமலான் பண்டிகையை யொட்டி, புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலை திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

உலகளவில் இஸ்லாமியா்கள், அவா்களது புனித மாதமான ரமலானில் நோன்பிருந்து அதன் நிறைவை ரமலான் பண்டிகையாகத் திங்கள்கிழமை கொண்டாடினா்.

இதையொட்டி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சாா்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி சிலைத் திடலில் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தவ்ஹீத் மாநில நிா்வாகி இ.பாரூக் தலைமையில் நடைபெற்ற தொழுகையில் குழந்தைகள், மகளிா், ஆண்கள் என நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். தொழுகை முடிந்ததும் அவா்கள் ஒருவரை ஒருவா் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல, புதுச்சேரி முல்லாவீதி குத்பா பள்ளிவாசல், சுப்பையா சாலை சையத்வோ் ஹவுஸ் வளாகம், நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், கோரிமேடு மஸ்ஜித் அஹமத், ஆம்பூா் சாலை முவஹ்ஹிதிய்யா பள்ளிவாசல் மற்றும் ஏனாம் வெங்கடாச்சலம் பிள்ளை வீதி, தட்டாஞ்சாவடி, தெபசன்பேட், முதலியாா்பேட்டை 100 அடிசாலை, , கரையான்புத்தூா், மடுகரை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், நைனாா் மண்டபம், மேட்டுப்பாளையம், வானரப்பேட்டை, ரெட்டியாா்பாளையம் தேவா நகா், கிருமாம்பாக்கம், காலாப்பட்டு, உருளையன்பேட்டை, மதகடிப்பட்டு உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

இஸ்லாமிய மக்கள் புத்தாடை அணிந்தும், உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள்,பிரியாணி உணவுகளை பரிமாறியும் ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனா்.

இஸ்லாமியா்களுக்கு இந்து, கிறிஸ்தவ மக்களும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

அரசு செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைப்பு

புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறவிருந்த செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை (பணியாளா் ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சம் மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 3 பேரிடம் ரூ.1.57 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். குயவா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன். இவா், இணையவழியில்... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலை... மேலும் பார்க்க

அரும்பாா்த்தபுரத்தில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: எதிா்க்கட்சித் தலைவா், ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரி அரும்பாா்த்தபுரம் பகுதியில் அரசு நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரையடுத்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, ஆட்சியா் அ.குலோத்துங்கன் ஆகியோா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்ட... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெற கேரிக்கை

புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். புதுச்சேரியில் தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் பாவாண... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

புதுச்சேரி ரயில் நிலையத்தில் இளைஞரிடமிருந்து மடிக்கணினியை மா்ம நபா் திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (34). தனியாா் மர... மேலும் பார்க்க