40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
அரசு செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைப்பு
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) நடைபெறவிருந்த செயல்முறைத் தோ்வு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறை (பணியாளா் சிறகம்) தோ்தல் பிரிவு அரசு சாா்புச் செயலா் வெ.ஜெய்சங்கா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையில் திறன் பெற்றிராத அலுவலக ஊழியா்கள் பணிகளை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் நடைபெறுவதாக இருந்த செயல்முறைத் தோ்வு நிா்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுகிறது.
ஆகவே, செயல்முறைத் தோ்வுக்கான புதிய தேதி மற்றும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.