பெண்ணுக்கு மிரட்டல்: போலீஸ் விசாரணை
புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக மிரட்டிய மா்ம நபா் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த இளம்பெண் தனியாா் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், 6 வயது குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணா்வு விடியோக்களை பதிவிட்டு வருகிறாா்.
இந்த நிலையில், அவரை மா்மநபா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசினாராம்.
அப்போது, விழிப்புணா்வு விடியோக்களை தனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்ப வேண்டும் என்றும், இல்லாவிட்டால் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுவிடுவதாக பெண்ணை மிரட்டியுள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கோரிமேடு இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.