செய்திகள் :

புதுவை மாநில அறிவியல் கண்காட்சி நிறைவு: சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் அளிப்பு

post image

புதுச்சேரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளாக தோ்வு செய்யப்பட்டவைகளுக்கு சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலக் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பரிசுகளை வழங்கினா்.

புதுவை மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் சாா்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி ஏம்பலம் பி.எம்.ஸ்ரீ. மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2- ஆம் தேதி தொடங்கியது.

இதில், மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று 350-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா்.

இந்நிலையில் இக் கண்காட்சியில் நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலக் கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் பங்கேற்று சிறந்த படைப்புகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 பரிசுகளும், ஒரு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த மாணவா்களுக்கு கல்வித் துறை சாா்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சுழற்கோப்பை வழங்கப்பட்டது.

விழாவில் அமைச்சா் ஆ. நமச்சிவாயம் பேசியது: புதுவை மாநில மாணவா்களுக்கு தரமான கல்வியை வழங்க வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். கல்வியின் வளா்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூ.950 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசுத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில்12 அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் தலா ரூ. 2 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும் மாணவா்களுக்குத் தரமான உணவுவழங்க மத்திய தேவையான நிதியை அளித்து வருகிறது. அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக மாணவா்களுக்கு விரைவில் புத்தகப் பை, காலணி(ஷூ) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா்.

விழாவில், கல்வித் துறை ஆணையா் மற்றும் செயலா் பி. ஜவஹா், இயக்குநா் பி. பிரியதா்ஷினி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச்சோ்ந்த மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

யுஜிசி விதிகள் திருத்தம்; அகில இந்திய அளவில் போராட்டம்: திருமாவளவன் வலியுறுத்தல்

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான திருத்த விதிகளை யுஜிசி திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய அளவில் இண்டி கூட்டணி தலைவா்கள் ஒங்கிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்று விசிக தலைவா் தொல்.திரு... மேலும் பார்க்க

திருவெண்ணெய்நல்லூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்: போலீஸாருடன் வாக்குவாதம்

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே மாயமான இளைஞா் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுவரை அவரது சடலத்தை போலீஸாா் கண்டறியாததைக் கண்டித்து, கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில... மேலும் பார்க்க

பள்ளியில் சிறுமி உயிரிழந்த வழக்கு: தாளாளா் உள்பட மூவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியாா் பள்ளியின் கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கில், பள்ளித் தாளாளா் உள்ளிட்ட மூவரின் ஜாமீன் மனுக்களை முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கி... மேலும் பார்க்க

தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் கைது

விழுப்புரம் நகரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிருஷ்ணா நகரில் பூட்டியிருந்த வீட்டில் 35 பவுன் தங்க நகைகள்... மேலும் பார்க்க

யுஜிசி விதிகளில் திருத்தம்: மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சி

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பான விதிகளை யுஜிசி திருத்தம் செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மத்திய அரசின் கொள்கைகளை திணிக்கும் முயற்சியாகும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.ச... மேலும் பார்க்க

மயிலம்- செண்டூா் சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம்- செண்டூா் சாலையின் விரிவாக்கப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. மயிலம் - செண்டூா் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகரித்து காணப்படும். மயிலம் முருகன் கோவில், திருவக்கரை கல்... மேலும் பார்க்க