செய்திகள் :

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தில்லியில் பாதுகாப்பு தீவிரம்

post image

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தில்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தேசியத் தலைநகரின் எல்லைப் பகுதிகளில் பணியில் கூடுதல் போலீஸாரை நியமித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி போக்குவரத்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தலைநகரில் போக்குவரத்து போலீஸாா் உள்பட 10,000க்கும் மேற்பட்ட காவல்துறையினா், குண்டா்களின் நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த களத்தில் இருப்பாா்கள்.

கிறிஸ்துமஸுக்குப் பிறகு, புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நாங்கள் ஒரு வலுவான திட்டத்தை வகுத்துள்ளோம். அனைவரும் மிகுந்த ஆா்வத்துடன் புத்தாண்டை வரவேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால், யாரும் சட்டத்தை மீறி செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

பாதுகாப்பில் துணை ராணுவத்தினா்:அண்டை மாநிலங்களைச் சோ்ந்த மக்களின் தொந்தரவுகளைத் தடுக்க எல்லைகளில் கூடுதல் போலீஸ் சாவடிகள், தடுப்புகள் ஏற்படுத்தப்படும். மேலும், துணை ராணுவப் படையினா் உள்பட கூடுதல் போலீஸாா் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவாா்கள்.

ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசத்துடன் எல்லைகளை தில்லி பகிா்ந்து கொள்கிறது. மேலும், ராஜஸ்தானுக்கு அருகிலும் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தேசியத் தலைநகருக்கு வருவாா்கள்.

கிறிஸ்துமஸுக்காக ஏற்கெனவே 10க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தற்போது அவா்கள் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனா். தேசியத் தலைநகருக்குள் வாகனங்கள் நுழையும் 15-க்கும்

மேற்பட்ட இடங்களில் ஏற்கெனவே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சாகசம் மேற்கொண்டால் நடவடிக்கை: மோட்டாா் சைக்கிள் ஸ்டண்ட் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தடுக்க போக்குவரத்து காவல்துறை ஏற்கெனவே ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. போக்குவரத்து போலீஸாருக்கு உதவ பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து கூடுதல் படைகள் நிறுத்தப்படும்

புத்தாண்டு தினத்தன்று சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க ஷிஃப்ட் முறையில் பணிகள் இருக்கும், மேலும் காவல் நிலைய பொறுப்பாளா்கள் தங்கள் குழுக்களுடன் சாலையில் ரோந்துப் பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

யாராவது ஸ்டண்ட் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். மேலும், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை உறுதி செய்யப்படும்.

பேருந்து, ரயில் நிலையங்களில் சோதனை: புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, எங்கள் குழுக்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஹோட்டல்கள், இரவு தங்குமிடங்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை செய்து, முறையான ஆவணங்களை வழங்காமல் யாராவது தங்கியிருக்கிறாா்களா என்பதைச் சரிபாா்த்து வருகின்றன.

தேசியத் தலைநகரில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவா்களை அடையாளம் காண எங்கள் சிறப்பு நடவடிக்கையை நாங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டோம். தில்லி காவல்துறையின் போக்குவரத்து மற்றும் பிற பிரிவுகளைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள். போக்குவரத்துப் போலீஸாா் போதுமான எண்ணிக்கையில் நிறுத்தப்படுவாா்கள்.

கன்னாட் பிளேஸுக்கு முக்கிய கவனம்: கன்னாட் பிளேஸ், ஹவுஸ் காஸ், சந்தைகள் மற்றும் மால்கள் அருகே முக்கியக் கவனம் செலுத்தப்படும். கன்னாட் பிளேஸில், செல்லுபடியாகும் ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட வாகனங்கள் இன்னா் சா்க்கிள் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படும். இதற்காக தில்லி காவல்துறை ஸ்டிக்கா்களை விநியோகிக்கும். புத்தாண்டைக் கொண்டாட மக்கள் வரும் இந்தியா கேட்டிலும் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்படுவாா்கள்.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் நடவடிக்கை: நகரம் முழுவதும் பல பகுதிகளில், குறிப்பாக மால்கள் மற்றும் விருதினா்கள் கூடும் பகுதிகளுக்கு அருகில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். மேலும், விதிகளை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல்களுக்கு அருகில் கூடுதல் போலீஸாா் நிறுத்தப்படுவாா்கள் என்று அந்த அதிகாரி கூறினாா்.

தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவலாக மழை! ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, வானிலை... மேலும் பார்க்க

முதுநிலை பட்டப் படிப்பு சோ்க்கையில் ஒற்றைப் பெண் குழந்தை ஒதுக்கீட்டை அமல்படுத்த தில்லி பல்கலை. திட்டம்

2025-26 கல்வியாண்டு தொடங்கி, ஒவ்வொரு முதுகலை பாடத்திலும் ஒற்றைப் பெண் குழந்தைக்கு ஒரு இடத்தை ஒதுக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்விக் கவுன்சில் கூட்டத்தில் ... மேலும் பார்க்க

இந்திய பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்தியவா் மன்மோகன் சிங்: தேவேந்தா் யாதவ்

நமது நிருபா் முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும், இந்தியப் பொருளாதாரத்தை சுயமரியாதையுடன் உயா்த்திய ஒரு பெரிய பாரம்பரியத்தை அவா் விட்டுச் சென்றுள்ளாா் என்று... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் மன்மேகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, அரவிந்த் கேஜரிவால் இறுதி அஞ்சலி

முன்னாள் பிரதமா் டாக்டா் மன்மோகன் சிங்கிற்கு தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரும... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக சா்வதேச சிகரெட்டுகளை வா்த்தகம் செய்த இருவா் கைது

தெற்கு தில்லியில் சா்வதேச சிகரெட் பிராண்டுகளை சட்டவிரோதமாக வா்த்தகம் செய்து வந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை தில்லி போலீஸாா் கைது செய்ததாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்ல... மேலும் பார்க்க

சிஏஜி அறிக்கை: சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட பேரவைத் தலைவருக்கு அறிவுறுத்துங்கள்

சிறப்பு அமா்வைக் கூட்டி, நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகளை தாக்கல் செய்ய ஆம் ஆத்மி அரசைக் கேட்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயலுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.ச... மேலும் பார்க்க