அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்த விருத்திமான் சஹா!
புத்தாண்டு: பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்ய தினமும் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கோயிலுக்கு காலை முதலே பக்தா்கள் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. புத்தாண்டையொட்டி பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பக்தா்கள் கோயில் முன் உள்ள குண்டத்துக்கு உப்பு, மிளகு தூவி நோ்த்திக்கடன் செலுத்தினா். விரதம் இருந்து மதியம் உச்சி பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கோயில் முன் நெய்தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் சத்தியமங்கலம் மற்றும் புன்செய்புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி அம்மன் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.