செய்திகள் :

புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்

post image

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

வங்கக் கடலில் கடந்த 24-ஆம் தேதி இலங்கைக்கு தென்கிழக்கே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.

இது வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30-க்கு ‘ஃபென்ஜால்’ புயல் உருவானது. புயல் உருவாவாதில் சில குழப்பங்கள் இருந்ததால் அதுபற்றிய மாறுபட்ட தகவல்கள் வெளியானது. ஆனால், இப்போது ஏற்கெனவே கணித்தபடி புயல் சின்னம் தீவிரமடைந்து ‘ஃபென்ஜால்’ புயலாக உருவாகிவிட்டது. தமிழக கடல் பகுதிக்குள் நுழைந்ததும் வேகம் எடுத்து புயலாக மாறிவிட்டதால் இனி அது புயலாகத்தான் கரையை கடக்கும்.

இந்தப் புயல் நாகை மாவட்டத்துக்கு கிழக்கே 180 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்தது. இது காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், வங்கக் கடலில் உருவான ‘ஃபென்ஜால்’ புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

இதையும் படிக்க |புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வங்கக் கடலில் உள்ள ‘ஃபென்ஜால்’ புயல் சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை(டிச.1) காலை மரக்காணம்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கக் கூடும்.

புயல் கரையை நெருங்கும் போது தாமதம், தாமதமாக சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களில் மழை அதிகரிக்கும்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை கனமழை பெய்யக்கூடும்.

புயல் கரையைக் கடக்கும் வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளார்.

இந்த நிலையில், காலை முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் வடியாத வெள்ளம்: நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நிறுத்தம்!

விழுப்புரம்: வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழையால் குடியிருப்புகளில் திங்கள்கிழமைவரை வெள்ளம் வடியாத நிலை காரணப்படுகிறது. இதனால் ... மேலும் பார்க்க

பாரம்பரிய சுற்றுலாவிற்கு ஏற்றயிடமாக மேற்கு வங்கம் தேர்வு: மமதா புகழாரம்

கொல்கத்தா: பாரம்பரிய சுற்றுலாவிற்கு தகுதிவாய்ந்த இடமாக மேற்கு வங்கத்தை யுனெஸ்கோ அறிவித்துள்ளதாகவும் இந்த அறிவிப்பு அம்மாநிலத்தின் சுற்றுலா துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனவும் முதல்வர் மமதா பான... மேலும் பார்க்க

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளன. பெரும்... மேலும் பார்க்க

வெள்ளநீரில் மிதக்கும் விழுப்புரம்! மீட்புப்பணிகள் தீவிரம்!

விழுப்புரம்: ஃபென்ஜால் புயல் காரணமாக, கொட்டித் தீர்த்த மழையால் விழுப்புரம் நகரிலும், நகரையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.இந... மேலும் பார்க்க

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு: 4 மாணவர்களுக்கு ஜாமீன்!

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை வழக்கு தொடர்பாக, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் பாதிப்பு: பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கண்காணித்து சீரமைத்திட பொறுப்பு அமைச்சர்களை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:ஃப... மேலும் பார்க்க