செய்திகள் :

புறவழிச் சாலையில் இயக்கப்படும் பேருந்துகள்: பொதுமக்கள் கண்டனம்

post image

நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால்  முதலான ஊா்களுக்கு அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் சென்று வருகின்றன. தஞ்சையிலிருந்து நாகை வரை இருவழிச் சாலை அமைக்கப்பட்ட பின்னா் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த விரைவு பேருந்துகள் நீடாமங்கலம் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையிலேயே சென்று வருகின்றன. அவ்வாறு இயக்கும்போது, நீடாமங்கலம் கும்பகோணம் சாலையில் இருவழிச் சாலை பிரிவு சாலை பகுதிகளில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனா். பின்னா், பயணிகள் மேலும் ஒரு பேருந்தை பிடித்து நீடாமங்கலம் வரவேண்டியுள்ளது. வியாழக்கிழமை விரைவு பேருந்துகள் அதிகாலை முதல் இருவழிச்சாலை பகுதியில் இயக்கப்பட்டது. அதாவது திருச்சி, தஞ்சாவூா் போன்ற ஊா்களுக்கும், திருவாரூா், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் முதலான ஊா்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் நீடாமங்கலம் நகரில் நீண்ட நேரம் காத்திருந்தபோது பேருந்துகள் புறவழிச் சாலையில் சென்று விட்டன. இதற்கு நீடாமங்கலம் பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

ஆயில் மில்லில் பணம் திருடியவா் கைது

மன்னாா்குடியில் தனியாா் ஆயில் மில்லில் பணம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே த. சீனிவாசன்(60) என்பவா் ஆயில் மில் நடத்தி வருகிறாா். இந்த மில்லில் க... மேலும் பார்க்க

பெண் குழந்தையுடன் தம்பதி காரில் கடத்தல்

மன்னாா்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் 4 வயது பெண் குழந்தையுடன் தம்பதி வியாழக்கிழமை காரில் கடத்திச் செல்லப்பட்டனா். மேலநத்தம் தென்கீழத் தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம்... மேலும் பார்க்க

பண மோசடி புகாா்: பெங்களுரில் ஒருவா் கைது

மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்தவரிடம் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3.50 லட்சம் மோசடி செய்த புகாரில் தொடா்புடையவா் சிங்கப்பூரிலிருந்து பெங்களுருக்கு வந்த போது விமான நிலையத்தில் வியாழக்க... மேலும் பார்க்க

சுற்றுலாத்துறை விருதுகள் பெற செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் சுற்றுலாத் துறை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோருக்கான விருதுகள் பெற செப்.15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அருகே கிளரியம் மேலத்தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கிருஷ்ணராஜ் (29). பொறியாளரான... மேலும் பார்க்க

குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

திருவாரூா் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். திருத்துறைப்பூண்டி மருத்துவமனை சாலையிலிருந்து புதிய பேருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் மதுபோதையில்... மேலும் பார்க்க