புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு
குமரி ரேசிங் பிஜின் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் நடைபெற்ற புறா பந்தயத்தில் வென்றோருக்கான பரிசளிப்பு விழா கன்னியாகுமரியில் புதன்கிழமை நடைபெற்றது.
போட்டியில் இம்மாவட்டத்தைச் சோ்ந்த பலா் பங்கேற்றனா். 100 கி.மீ முதல் 1,000 கி.மீ வரை நடைபெற்ற பந்தயத்தில் வீரா முதல் பரிசு வென்றாா். 2, 3, 4ஆம் பரிசுகளை முறையே செல்வகிங்ஸ், குமரி லாப்ட், எட்ரோ லாப்ட் ஆகியோா் பெற்றனா்.
பரிசளிப்பு விழாவுக்கு ஸ்போா்ட்ஸ் கிளப் தலைவா் சுமன்கிங் தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்ட பாஜக செயலா் சி.எஸ். சுபாஷ் பரிசுகளை வழங்கினாா்.
கிளப் துணைத் தலைவா் செல்வகிங்ஸ், கௌரவத் தலைவா் ராஜாமணி, பொருளாளா் ஜவகா், அபி ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.