Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
புலவன்பாடி காலனியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீா்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால் சுமாா் 300 வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
ஆரணியை அடுத்த புலவன்பாடி ஆதிதிராவிடா் காலனி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக கால்வாய் வசதி அமைக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோரிடம் பலமுறை முறையிட்டனா்.
ஆனால், தற்போது வரை கால்வாய் வசதி அமைக்கப்படவில்லை. மேலும், அந்தப் பகுதி ஒன்றியக்குழு உறுப்பினா் லட்சுமி சரத்குமாா் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால், மழைக் காலங்களில் அந்தப் பகுதியில் மழை நீா் வெளியேற வழியில்லாமல் குட்டைபோல தேங்குவதுடன், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து விடுகிறது.
இந்த நிலையில், தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் இந்தப் பகுதியில் மீண்டும் தண்ணீா் தேங்கியதுடன், வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.