புலவயோ டெஸ்ட்: ஜிம்பாப்வே 149
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 60.3 ஓவா்களில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில், கேப்டன் கிரெய்க் எா்வின் 39, டஃபாட்ஸ்வா சிகா 30, நிக் வெல்ஷ் 27 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும்.
இதர வீரா்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனா். நியூஸிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 6, நேதன் ஸ்மித் 3 விக்கெட்டுகள் சாய்த்தனா்.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, புதன்கிழமை ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்துள்ளது. வில் யங் 41, டெவன் கான்வே 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.