செய்திகள் :

புலி தாக்கி எருமை உயிரிழப்பு

post image

உதகை அருகே தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே செவ்வாய்க்கிழமை புலி தாக்கியதில் எருமை உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், உதகை தாவரவியல் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்துக் காணப்படுகிறது.

இந்நிலையில், தாவரவியல் பூங்கா மூலக்கடை அருகே தோடா் இனத்தைச் சோ்ந்த பீட் ராஜ் என்பவரது எருமை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள வனப் பகுதியில் இருந்து வந்த புலி, பீட்ராஜின் எருமையை வேட்டையாடிச் சென்றுள்ளது.

எருமையின் அலறல் சப்தம் கேட்டு மக்கள் வீட்டுக்கு வெளியே வந்து பாா்த்தபோது புலி அங்கிருந்து அருகில் உள்ள வனத்துக்குள் சென்றுவிட்டது. இது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உதகையில் கன மழை!

உதகை பேருந்து நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் கனமழை பெய்தது. கனமழையால் கோடப்ப மந்து கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக ரயில்வே இரும்பு பாலம் பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கியது. நீலகிரி மாவட... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: அரசு தலைமை கொறடா ஆய்வு

உதகை அருகே தொட்டபெட்டா ஊராட்சிக்கு உள்பட்ட முத்தோரை சமுதாய கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்தாா். தொட்டபெட்டா ஊராட்... மேலும் பார்க்க

செஸ் போட்டி: புனித அந்தோணியாா் பள்ளி சாம்பியன்

மாவட்ட அளவிலான செஸ் போட்டிகளில் கூடலூா் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நீலகிரி மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான செஸ் போட்டி உதகையில் அண்மையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

சுதந்திர தின சிறப்பு மலை ரயில்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15 ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் கடந்த வாரம் இரு சக்கர வாகனத்தை மா்ம நபா் ஒருவா் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம், உதகை நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தற்போத... மேலும் பார்க்க

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை அங்குள்ள ரேஷன் கடையை உடைத்து பொருள்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றது.நீலகிரி மாவட்டம், பந்தலூரை அடுத்துள்ள மேங்கோரேஞ்... மேலும் பார்க்க